6 பணய கைதிகளை ஹமாஸ் விடுவிப்பு!

0
5

இஸ்ரேல் – ஹமாஸ் போர் நிறுத்த ஒப்பந்தப்படி மேலும் 6 பணய கைதிகளை ஹமாஸ் நேற்று விடுதலை செய்தது.

இஸ்ரேல் – ஹமாஸிற்கு  இடையே ஏற்பட்டுள்ள போர் நிறுத்த ஒப்பந்தத்தையடுத்து வாரம்தோறும் சனிக்கிழமையன்று இஸ்ரேல் பணய கைதிகளை ஹமாசும், இஸ்ரேல் சிறையில் உள்ள பலஸ்தீனர்களை இஸ்ரேலும் விடுவித்து வருகின்றன.

அதன்படி தற்போது வரை 24 இஸ்ரேல் பணய கைதிகளை ஹமாஸ் அமைப்பும், அதற்கு ஈடாக 1,099 பாலஸ்தீனர்களை இஸ்ரேலும் விடுவித்துள்ளன.

இதன் தொடர்ச்சியாக நேற்று மேலும் 6 பணயக் கைதிகள்  ஹமாஸ்  அமைப்பின் பிடியில் இருந்து விடுவிக்கப்பட்டு  செஞ்சிலுவை சங்கத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டனர். அவர்கள்  அனைவரும் இஸ்ரேலுக்கு திரும்பி விட்டதாக இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளது.  

இதேவேளை இதற்கு ஈடாக இஸ்ரேல் சிறையில் இருந்து 620 பலஸ்தீனர்கள் விடுவிக்கப்பட்டனர்.