6 பேரைக் கொண்ட கிரிக்கெட் தெரிவுக்குழு நியமனம்

0
146

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் பிரமோதய விக்கிரமசிங்க தலைமையில் 6 பேர் கொண்ட கிரிக்கெட் தெரிவுக்குழு நியமிக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் குறித்த குழுவின் செயற்பாடுகள் அமைந்துள்தாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளது. குழுவின் நியமனத்திற்கு விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ ஒப்புதல் அளித்துள்ளார்.

பிரமோத விக்ரமசிங்க குறித்த குழுவுக்கு தலைவராக நியமிக்கப்பட்டுள்ள நிலையில், குழுவின் ஏனைய உறுப்பினர்களாக ரொமேஸ் களுவிதாரண, ஹேமந்த விக்ரமரத்ன, வருண வராகொட, எஸ்.எச்.யு.கர்னைன், திலகா நில்மினி குணரத்ன ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.