அமெரிக்காவின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் தனது பால்கன் 9 ராக்கெட் மூலம் 60 செயற்கைக்கோள்களை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது.
புளோரிடா மாகாணத்தில் உள்ள கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து கடந்த செவ்வாய்கிழமை நள்ளிரவு இந்த செயற்கைக்கோள்கள் விண்ணில் செலுத்தப்பட்டன.
புவியின் சுற்றுப்பாதையில் செயற்கைக்கோள்கள் நிலை நிறுத்தப்பட்டதை அடுத்து ராக்கெட்டின் பூஸ்டர் வெற்றிகரமாக தரையிறக்கப்பட்டது. மறுசுழற்சி முறையில் இதுவரை 9 முறை பால்கன் 9 ராக்கெட் பயன்படுத்தப்பட்டுள்ளது.
மேலும், ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் இதுவரை 1,500க்கும் மேற்பட்ட செயற்கைக்கோள்களை அனுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.