27.9 C
Colombo
Thursday, September 19, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

737 மெக்ஸ் ரக விமா­னங்கள் தொடர்பில் ஏமாற்­று­வ­தற்கு சதி

737 மெக்ஸ் ரக விமா­னங்கள் தொடர்பில் அமெ­ரிக்க அரசை ஏமாற்­று­வ­தற்கு சதி செய்தமை தொடர்­பான வழக்கின் குற்­றச்­சாட்டு ஒன்றில், தான் குற்­ற­வாளி என ஒப்­புக்­கொள்­வ­தற்கு போயிங் நிறு­வனம் சம்­ம­தித்­துள்­ளது என அமெ­ரிக்க நீதித் திணைக்­களம் தெரி­வித்­துள்­ளது.

டெக்ஸாஸ் நீதிமன்றமொன்றில் தாக்கல் செய்த மனுவில் நீதித் திணைக்­களம் இவ்­வாறு தெரி­வித்­துள்­ளது.

விமான அனர்த்­தங்­களில் பாதிக்­கப்­பட்­ட­வர்­களின் குடும்­பங்­க­ளுக்கு 487 மில்­லியன் டொலர் இழப்­பீடு வழங்­கவும் அந்­நி­று­வனம் சம்­ம­தித்­துள்­ளது.

போயிங் நிறு­வனம் தயா­ரித்த 737 மெக்ஸ் ரக விமா­னங்கள் 2018 மற்றும் 2019ஆம் ஆண்­டுகளில் 5 மாத இடை­வெ­ளியில் வீழ்ந்­ததால் 346 பேர் உயி­ரி­ழந்­தமை பெரும் சர்ச்­சையை ஏற்­ப­டுத்­தி­யது.

2018 ஒக்­டோபர் 29ஆம் திகதி இந்­தோ­னே­ஷி­யாவின் லயன் எயார் நிறு­வ­னத்தின் போயிங் 737 மெக்ஸ் ரக விமானம் வீழ்ந்­ததால் 189 பேர் இறந்­தனர்.

2019 மார்ச் 10ஆம் திகதி எத்­தி­யோப்­பியன் எயார்லைன்ஸ் நிறு­வ­னத்­துக்குச் சொந்­த­மான விமானம் வீழ்ந்­ததால் 157 பேர் இறந்தனர்.

இதை­ய­டுத்து, 2019 மார்ச் முதல் 2020 டிசெம்பர் வரை உல­கெங்கும் போயிங் 737 மெக்ஸ் ரக விமா­னங்கள் தரை­யி­றக்கி வைக்­கப்­பட்­டி­ருந்­தமை குறிப்­பி­டத்­தக்­கது.

அதன் பின் கடந்த ஜன­வரி மாதம் அலாஸ்கா எயார்லைன்ஸ் நிறு­வ­னத்­துக்குச் சொந்­த­மான போயிங் 737 மெக்ஸ் ரக விமா­ன­மொன்று பறந்­து­கொண்­டி­ருந்­த­போது, நடு­வானில் அதன் கதவு கழன்று வீழ்ந்­தமை போயிங் நிறு­வ­னத்தின் புக­ழுக்கு மேலும் பாதிப்பை ஏற்­ப­டுத்­தி­யது.

ஒரு காலத்தில் தனது வர்த்­தக விமா­னங்­களின் தரம் மற்றும் பாது­காப்­புக்­காக புகழ்­ பெற்­றி­ருந்த நிறு­வனம் போயிங். தற்­போது மேற்­படி குற்­றச்­சாட்டு தொடர்பில் தான் குற்­ற­வாளி என ஒப்­புக்­கொண்­டமை அந்­நி­று­வ­னத்தின் புக­ழுக்கு பாரிய இழுக்­காக கரு­தப்­ப­டு­கி­றது. 

மேற்­படி விபத்­து­களின் பின்னர், அந்­நி­று­வனம் தயாரித்த விமா­னங்­களின் தரம், பாது­காப்பு குறித்து பல கேள்­விகள் எழுப்­பப்­பட்­டன.

இது தொடர்­பாக போயிங் நிறு­வனம் விடுத்த அறிக்­கையில், தீர்­வொன்­றுக்­காக நீதித் திணைக்க­ளத்­துடன் தான் உடன்­பாடு ஒன்றை எட்­டி­யுள்­ள­தாக தெரி­வித்­துள்­ளது.

டெக்ஸாஸ் மாநி­லத்­தி­லுள்ள நீதி­மன்­ற­மொன்றில் தாக்கல் செய்­யப்­பட்ட ஆவ­ணங்­களில், 737 மெக்ஸ் ரக விமா­னங்­க­ளுக்­கான சான்­றி­தழ்­களை பெறு­வதற்­கான செயற்­பாட்­டின்­போது, அமெ­ரிக்க அரசை ஏமாற்­று­வ­தற்கு சதி செய்த குற்­றச்­சாட்டு தொடர்பில் தான் குற்­ற­வாளி என  போயிங் நிறு­வனம் ஒப்­புக்­கொண்­டுள்­ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த உடன்­பாட்டின் மூலம் கிரி­மினல் வழக்கு விசா­ர­ணையை போயிங் தவிர்த்துக்கொண்­டுள்­ளது. அதே­வேளை, இணக்கம் மற்றும் பாது­காப்பு செயற்­றிட்­டங்­க­ளுக்­காக 455 மில்­லியன் டொலர்­களை முத­லீடு செய்­யவும் அந்­நி­று­வனம் இணங்­கி­யுள்­ளது.

போயிங் நிறு­வ­னத்தில் மேற்­கொள்­ளப்­படும் இத்­த­கைய மாற்­றங்­களை அர­சாங்­கத்­தினால் நிய­மிக்­கப்­பட்ட சுயா­தீன விசா­ரணைக் குழுவொன்று 3 வரு­டங்­க­ளுக்கு மேற்­பார்வை செய்யும்.  

அத்­துடன் பாதிக்­கப்­பட்­ட­வர்­களின் குடும்­பங்­களை போயிங் நிறு­வன பணிப்­பா­ளர்கள் சபையினர் சந்திக்கவும் உடன்பாடு காணப்பட்டுள்ளது.

எவ்வாறெனினும், மேற்படி விமான அனர்த்தங்களில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்கள் இந்த உடன்படிக்கையை நிராகரித்துள்ளன. எதிர்வரும் வழக்கு விசாரணையின்போது, இந்த உடன்படிக்கையை நீதிமன்றம் நிராகரிக்க வேண்டும் என அவர்கள் கோரவுள்ளனர் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles