75 வருடங்களாக நாட்டின் பொருளாதாரம் ஒரே மைய்யப்புள்ளியிலேயே காணப்படுகின்றது – ரவி கருணாநாயக்க v

0
127

நாடு சுதந்திரமடைந்து 75 வருடங்களாகின்ற போதிலும் நாட்டின் பொருளாதாரம் ஒரே மைய்யப்புள்ளியில் இருப்பது மட்டுமே தற்போதுவரை தொடர்ந்து வருவதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று (01) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

மிகவும் நெருக்கடியான சூழலில் முன்வைக்கப்பட்டுள்ள இடைக்கால வரவு-செலவு திட்டம் தொடர்பில் முன்னாள் நிதியமைச்சர் என்ற முறையில் ஒரு சில விடயங்களை கூற வேண்டும் என்று நினைக்கின்றேன்.

நிதி அமைச்சர் என்ற முறையில் 2015 ஆம் ஆண்டு ஏற்பட்டு இருந்த நெருக்கடியே தற்போதும் ஏற்பட்டுள்ளது.

2015ஆம் ஆண்டும் நாட்டின் பொருளாதாரமானது பாரிய வீழ்ச்சியை சந்தித்து இருந்தது.

2015ஆம் ஆண்டு நாட்டின் வரவு செலவுத்திட்டன் தேசிய உற்பத்தி வருமானமானது நூற்றுக்கு 8.23 ஆக காணப்பட்ட நிலையிலேயே அந்த வருமானத்தை 33 மாதங்களில் நூற்றுக்கு 15 சதவீதமாக அதிகரித்தோம்.

ஒரு விடயத்தை நினைவூட்ட விரும்புகின்றேன். இன்று ஜனாதிபதியாக இருந்து செயற்பட்டவரே அன்று பிரதமராக இருந்து எமக்கு ஆலோசனைகளை வழங்கினார்.

அப்போது செயலாளராக இருந்தவரே தற்போதும் ஜனாதிபதி செயலகத்தில் செயலாளராக பொருளாதாரத்தை பலப்படுத்துவதற்கான ஆலோசனைகளை வழங்கி வருகின்றார்.

அன்று பிரதி ஆளுநராக செயற்பட்டவர் இன்று மத்திய வங்கி ஆளுநராக செயற்பட் டு வருகின்றார்.

2015 ஆம் ஆண்டு நாட்டின் பொருளாதாரத்தை பலப்படுத்துவதற்காக ஒன்றிணைந்த தரப்பினரே தற்போதும் ஒன்றிணைந்து செயற்பட்டு வருகின்றனர்.

உண்மையில் நாட்டில் தற்போது ஏன் இவ்வாறான நெருக்கடி ஏற்பட்டுள்ளது?

2015-2017 வரையான பொருளாதாரத்தை நூற்றுக்கு 50, 60 சதவீதமாக அதிகரிப்பதை இலக்காக கொண்டு செயற்பட்டதை போன்றதொரு நிலைமையே ஐந்து வருடங்களுக்கு பின்பு தற்போதும் நாட்டில் ஏற்பட்டுள்ளது.

தனியார் துறைக்கு கொடுத்திருந்த முக்கியத்துவத்தை மீண்டும் வழங்க வேண்டும் என்ற ஒரு தீர்மானத்துக்கு அரசாங்கம் வந்துள்ளது.

நாடு சுதந்திரமடைந்த 75 வருடங்களாகின்ற போதிலும் நாட்டின் பொருளாதாரம் ஒரே மைய்யப்புள்ளியில் இருப்பது மட்டுமே தற்போது தொடர்ந்து வருகின்றது.

இதில் எவ்வாறு நாம் மாற்றத்தை கொண்டு வர வேண்டும் என்பதே தற்போதுள்ள கேள்வியாகும்.