8 கிராம் 330 மில்லிகிராம் ஹெரோய்னுடன் ஒருவர் கைது

0
118

கெக்கிராவ பொலிஸ் பிரிவுக்கு பட்டுலந்த பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனை நடவடிக்கையின்போது, 08 கிராம் 330 மில்லிகிராம் ஹெரோய்னுடன் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கெக்கிராவ பிரதேசத்தை சேர்ந்த 44 வயது நபரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.

குற்றப்புலனாய்வு பிரிவினர் மேற்கொண்ட தேடுதல் சோதனை நடவடிக்கையின்போதே குறித்த நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இது தொடர்பில், பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.