8000 கோடிக்கு மேல் வசூல் செய்த சீன திரைப்படம்!

0
5

சீன திரைப்படம் ஒன்று வெளியான 12 நாட்களில் 1 பில்லியன் அமெரிக்க டொலர் அதாவது இந்திய மதிப்பில் 8 ஆயிரம் கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.கடந்த ஜனவரி 29 ஆம் திகதி சீனாவில் வெளியான அனிமேஷன் படம்இ ‘நே ஜா 2’ ஆகும்.

இந்த திரைப்படம் 16 ஆம் நூற்றாண்டில் வெளியான சீன நாவலான ‘இன்வெஸ்டிச்சர் ஆஃப் தி காட்ஸ்’ என்ற நாவலை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.பெரும்பாலும் ஹாலிவுட் திரைப்படங்கள் தான் உலக அளவில் 1 பில்லியின் அமெரிக்க டொலர் அளவுக்கு மேலாக வசூல் செய்வதை வழக்கமாகக் கொண்டுள்ளன.
இந்த நிலையில் ஹாலிவுட் அல்லாத ஒரு திரைப்படம் இந்த வசூலை பெற்றுள்ளது.இந்தப் படத்தை 80 மில்லியன் அமெரிக்க டொலர் செலவு செய்து உருவாக்கியுள்ளனர்.