86 வயதில் கலக்கிய முதியவர் : தங்கப்பதக்கங்களை வென்று அசத்தல்

0
110

விளையாட்டிற்கு வயது ஒரு தடையே இல்லை என்பதை நிரூபித்துள்ளார் spor6 வயதான முதியவர் ஒருவர்.

தமிழகம் கோவை மாவட்டத்தைச் சேர்ந்த சுப்பிரமணியம் சுப்பு என்ற 86 வயது முதியவர் ஆசிய மாஸ்டர்ஸ் தடகள போட்டியில் பங்கேற்று நான்கு தங்க பதக்கங்களை வென்று அசத்தியுள்ளார்.பிலிப்பைன்ஸ் நாட்டில் நடைபெற்ற வயது மூத்தோருக்கான 22வது ஆசிய மாஸ்டர் தடகளப் போட்டியில் பங்கேற்ற இவர் நீளம் தாண்டுதல், ட்ரிபிள் ஜம்ப், உயரம் தாண்டுதல், ஈட்டி எறிதல் ஆகிய விளையாட்டுகளில் 85 வயதுக்கு மேற்பட்டோர் பிரிவில் போட்டியிட்டு பதக்கம் வென்றுள்ளார்.இந்த போட்டியில் பங்கேற்பதற்கு முன்னர் சிறப்பு பயிற்சிகளை மேற்கொண்ட சுப்பிரமணியம், அதன் பிரதிபலனாக பதக்கமும் வென்று அசத்தியுள்ளார்.