9 பிரதேச செயலக பிரிவுகளுக்கு மண்சரிவு அனர்த்த எச்சரிக்கை

0
230

இரத்தினபுரி மாவட்டத்தில் 9 பிரதேச செயலக பிரிவுகளுக்கு மண்சரிவு அனர்த்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இரத்தினபுரி மாவட்டத்தில் எஹெலியகொட, குருவிட்ட, இரத்தினபுரி ,கிரியெல்ல, எலபாத்த, பலாங்கொடை, இம்புல்பே, வெலிகேபொல மற்றும் ஓப்பநாயக்க ஆகிய பிரதேச செயலக பிரிவுகளுக்கே இவ்வாறு மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.