93 வயதில் 5 ஆவது திருமணம்! 

0
88

உலகின் பிரபல ஊடக நபரொருவர் தனது 93 ஆவது வயதில், 5 ஆவது முறையாக திருமணம் செய்து கொள்ளவுள்ளார்.

ஐந்து கண்டங்களில் ஊடக சாம்ராஜ்ஜியத்தை கொண்டுள்ள கீத் ரூபர்ட் முர்டாக் என்பவரே இவ்வாறாக திருமணம் செய்து கொள்ளவுள்ளார்.

ஓய்வுபெற்ற விஞ்ஞானியான 67 வயதுடைய எலினா சுகோவாவை நேற்றைய தினம் நிச்சயம் செய்த நிலையிலேயே, அவர் இந்த அறிவிப்பை மேற்கொண்டுள்ளார். அமெரிக்காவில் ஃபாக்ஸ் நியூஸ், நியூயார்க் போஸ்ட், வால் ஸ்ட்ரீட் ஜர்னல், இங்கிலாந்தின் தி சன், அவுஸ்திரேலியாவின் தி டெய்லி மிரர் உள்ளிட்ட நிறுவனங்களின் உரிமையாளராக கீத் ரூபர்ட் முர்டாக் திகழ்கிறார்.

அத்துடன், அமெரிக்கா, அவுஸ்திரேலியா, ஐரோப்பா உள்ளிட்ட ஐந்து கண்டங்களில் அவர் ஊடக சாம்ராஜ்ஜியத்தை கொண்டுள்ளார்.

கடந்த 1956 ஆம் ஆண்டு அவுஸ்திரேலியாவை சேர்ந்த விமானப் பணிப் பெண்ணான பெட்ரீசியா பூகரை, கீத் ரூபர்ட் முர்டா முதல்முறை திருமணம் செய்து கொண்டார்

இந்ந திருமணத்தை 1967 ஆம் ஆண்டில் நிறைவு செய்த அவர், அதே ஆண்டு அன்னா டோர்வ் எனும் செய்தி வாசிப்பாளரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார்.சில காலங்களின் பின்னர் அந்த உறவும் முறிந்த நிலையில், தன்னை விட 37 வயது குறைவான சீனாவை சேர்ந்த வென்டி டெங் எனும் இளம் பெண்ணை மூன்றாவது முறையாகவும் கீத் ரூபர்ட் முர்டாக் திருமணம் செய்தார்.

இந்த நிலையில், அவரையும் விவாகரத்து செய்து கடந்த 2016 ஆம் ஆண்டு மாடல் அழகியான ஜெரி ஹோல் என்பவரை அவர் நான்காவதாக மணம் முடித்திருந்ததுடன், கடந்த 2022 ஆம் ஆண்டு அவரை விவகாரத்து செய்தார்.

அந்த உறவும் தற்போது முடிவுக்கு வந்துள்ள நிலையில், தனது நீண்ட நாள் தோழியான எலினா சுகோவாவை ஐந்தாவதாக திருமணம் செய்துக் கொள்ள இருப்பதாக முர்டாக் அறிவித்துள்ளார்.