9ஆவது ஐ.சி.சிமகளிர் ரி20 உலகக்கிண்ணம்இன்று ஆரம்பம்

0
54

ஒன்பதாவது ஐசிசி மகளிர் ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு இராச்சியத்தில் இன்று ஆரம்பமானது. 10 நாடுகள் பங்குபற்றும் மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட் சுற்றுப் போட்டி ஷார்ஜா கிரிக்கெட் மைதானத்திலும் துபாய் கிரிக்கெட் மைதானத்திலும் நடைபெறவுள்ளது.


இப் போட்டி ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெறுகின்றபோதிலும் வரவேற்பு நாடு என்ற அந்தஸ்தை பங்களாதேஷ் கொண்டுள்ளது. ஷார்ஜாவில் இன்று பிற்பகல் 3.30 மணிக்கு ஆரம்பமான பி குழுவுக்கான ஆரம்பப் போட்டியில் பங்களாதேஷ், ஸ்கொட்லாந்து அணிகள் மோதின.


இப் போட்டியைத் தொடர்ந்து இரவு 7.30 மணிக்கு ஆரம்பமாகும் ஏ குழுவுக்கான முதலாவது போட்டியில் இலங்கை – பாகிஸ்தான் அணிகள் மோத உள்ளன.