ஜனாதிபதியின் அறிவிப்பு?

0
272

கோட்ட கோ ஹோம் – எதிர்ப்பு, 50 நாட்களைக் கடந்திருக்கும் நிலையில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, தான், ஒரு தோல்விய டைந்த ஜனாதிபதியாகப் பதவி விலகப் போவதில்லையென்று தெரி வித்திருக்கின்றார் – நான் அடுத்த தேர்தலில் போட்டியிடப் போவதில்லை. ஆனால் – தற்போது எனக்கு மக்கள் வழங்கிய ஆணையின்படி, மிகுதிக் காலத்தையும் பூர்த்திசெய்துவிட்டுத்தான் செல்லவுள்ளார் என்று, அழுத் தம் திருத்தமாகத் தெரிவித்திருக்கின்றார். ஜனாதிபதியின் அதிகாரங்களை குறைத்து, பிரதமரின் அதிகாரங்களை அதிகரிப்பது தொடர்பான உரையாடல்கள் இடம்பெற்று வருகின்ற நிலையில்தான், அவர் இவ்வாறு தெரிவித்திருக்கின்றார்.
ராஜபக்ஷக்களின் அதிகார மையம் தகர்ந்திருக்கும் நிலையில் – ராஜபக்ஷ குடும்பத்தில் அதிகாரத்தோடு இருப்பவர் கோட்டாபய ராஜபக்ஷ மட்டும்தான். இதேவேளை, பொதுஜன பெரமுனவை பஸில் ராஜபக்ஷ கட்டுப்படுத்துவதாகவே பரவலாக நம்பப்படுகின்றது. இந்தப் பின்னணியில் நோக்கினால், பஸில் அதிகாரத்தில் இல்லாது போனாலும்கூட, கட்சியைக் கட்டுப்படுத்தும் அதிகாரத்தில் இருப்பதான தோற்றமே தெரிகின்றது.
பொதுஜன பெரமுனவிலுள்ள 60 விகிதத்திற்கு மேற்பட்ட உறுப்பி னர்கள், பஸில் ராஜபக்ஷவையே தங்களின் ஞான குருவாக கருதுகின்ற னர் என்று சில தென்னிலங்கை அரசியல் அவதானிகள் குறிப்பிடுகின்றனர் – அந்தளவுக்கு, பஸிலுக்கு அவர்கள் விசுவாசமாக இருக்கின்றனர் – ஏனெனில், அவர்களில் பெரும்பாலானவர்களை அரசியலுக்கு கொண்டு வந்தவர் பஸில். அவர்களைப் பொறுத்தவரையில், தாங்கள் அரசியலில் இருப்பதற்கு பஸில் ராஜபக்ஷவே காரணம். இந்த விசுவாசமே மறுபுறம் பஸில் ராஜபக்ஷவுக்கு சாதகமாக இருக்கின்றது.
கோட்டாபயவை பொறுத்தவரையில் அவர் விரும்பினாலும் அடுத்த ஜனாதிபதி தேர்தலில், போட்டியிடுவதற்கான சூழல் இல்லை. அதே வேளை, போட்டியிட்டு தோல்வியடையவும் அவர் விரும்ப மாட்டார். இந்த நிலையில் தனது காலத்தில், தன்னால் ஏற்பட்ட சிக்கல்களைப் போக்கும் வகையில், ஒரு சில விடயங்களையாவது செய்துவிட்டுப் போவதற்கே அவர் முயற்சிக்கக்கூடும். இதற்கு முதலில் ஸ்திரமான அர சாங்கம் கட்டாயமானது. ஒரு ஸ்திரமான அரசாங்கம் அமைய வேண்டு மாயின், ரணில் தொடர்ந்தும் சுதந்திரமாக செயலாற்றக் கூடியவாறான சூழல் பாராளுமன்றத்தில் இருக்க வேண்டியது கட்டாயமானது.
ஆனால், கட்சி ஜனாதிபதியின் கட்டுப்பாட்டில் இல்லாதபோது, ஜனாதிபதியால் எந்தளவுக்கு ரணிலுக்கு உதவ முடியுமென்பதும் கேள்விக்குறிதான். பஸில் ராஜபக்ஷவை பொறுத்தவரையில், தங்களு டைய கட்டுப்பாட்டில் பெரும்பான்மையான பாராளுமன்ற உறுப்பினர்கள் இருப்பதால், கட்சி தன்னுடைய கட்டுப்பாட்டில் இருப்பதான நிலைப்பாட்டில் இருக்கின்றார்.
சில தினங்களுக்கு முன்னர், மகிந்த மீண்டும், பிரதமரானாலும் ஆச்சரிப்பட ஒன்றுமில்லையென்று, அவர் குறிப்பிட்டிருந்ததையும் இந்த இடத்தில் குறித்துக் கொள்ளலாம். ஆனால், ஒருவேளை, பொதுஜன பெரமுனவின் ஆதரவில், பஸில் பிரதமரானாலும்கூட, நாட்டை முன் கொண்டு செல்ல முடியாது. ஏனெனில், ராஜபக்ஷக்களின் தோல்வியின் காரணமாகத்தான் ரணில் இந்த இடத்திற்கு வரநேர்ந்தது. ரணில் தோற் றால், ஒரு வெற்றிபெற்ற ஜனாதிபதியாக, அரசியலிலிருந்து ஒதுங்கும் கோட்டாபயவின் எண்ணம், ஒருபோதுமே, ஈடேறப் போவதில்லை.
இலங்கையின் அரசியல் வரலாற்றில், கோட்டாபய ராஜபக்ஷ போன்று, இதற்கு முன்னர் இருந்த எந்தவொரு ஜனபாதியும் இந்தளவு சிக்கல்களை, எதிர்ப்புக்களை எதிர்கொள்ளவில்லை. இத்தனைக்கும், தனிச்சிங்கள மக்களின் வாக்குகளால் வெற்றிபெற்றிருந்தும், தன்னை யொரு சிங்கள – பௌத்த தலைவனாக பிரகடனம் செய்திருந்தும்கூட, கோட்டாபய இந்தளவு நெருக்கடிகளை எதிர்கொண்டிருக்கின்றார் – என்றால், கோட்டாபய வெற்றிபெற்ற ஜனாதிபதியாக வெளியேற வேண்டுமானால், அவர் அதிகம் உழைக்க வேண்டியிருக்கும். அவரால் அது முடியுமா என்பதுதான் இப்போதுள்ள கேள்வி.