பாராளுமன்றம் தனது ஆணையை இழந்துள்ளது. இதனால் அது கலைக்கப்பட வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம். ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
நேற்று பாராளுமன்றத்தில் உரையாற்றியபோது மேற்கண்டவாறு தெரிவித்த அவர், தற்போது அரசாங்கத்திலும், வெளியிலும் தங்களை சுயாதீன எம். பிக்கள் என்று கூறும் பல குழுக்கள் உள்ளன. எனவே, பாராளுமன்றத்தில் அரசாங்க தரப்பு, எதிர் தரப்பு என்று அழைக்கப்பட முடியாது.
இந்தப் பாராளுமன்றம், சுயாதீனமாக இயங்கும் எம். பிக்களையே கொண்டுள்ளது. இது ஒரு புதிய ‘வழக்கம்’ (fashion). இலங்கை பாராளுமன்றம் அரசாங்கமும் எதிர்க்கட்சியும் கொண்டது. சுயாதீனமாக இயங்கும் எம். பிக்களை அல்ல. இங்கே அமர்ந்திருக்கும் அனைவரும் சுயாதீனமாக இயங்கும் எம். பிக்கள் என்று கூறினால் இந்தப் பாராளுமன்றம் தோல்வியடைந்து விட்டது. அது எங்கள் அமைப்புமுறை அல்ல.
பொருளாதார நெருக்கடிக்கு காரணமானவர் இன்னும் ஜனாதிபதியாகவே இருக்கிறார். நெருக்கடியை சமாளிக்க பொறுப்பான நபர் பதவியிலிருந்து நீக்கப்பட வேண்டும் – என்றும் அவர் கூறினார்.