எரிபொருள் கோரி இடம்பெறும் போராட்டம் காரணமாக கொட்டாவை – மாகும்புர பல்நோக்கு போக்குவரத்து மத்திய நிலையத்தின் செயற்பாடுகள் முற்றாக பாதிக்கப்பட்டுள்ளது.
எதிர்ப்பில் ஈடுபட்டுள்ளவர்கள் தமது பேருந்துகளை பல்நோக்கு போக்குவரத்து மத்திய நிலையத்தை மறித்து நிறுத்தி எதிர்ப்பில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நாட்டில் நிலவும் கடும் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக நாட்டின் பல பகுதிகளிலும் இவ்வாறான போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.