தளம்பல் வெளிவிவகாரக் கொள்கை?

0
388

ஐக்கிய நாடுகள் சபை, சீனாவின் உள்விவகாரங்களில் தலையிடக் கூடாதென்று இலங்கை தெரிவித்திருக்கின்றது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 50ஆவது கூட்டத்தொடரில் கலந்து கொண்டிருந்த, இலங்கையின் தூதுக் குழுவினர் இதனை வலியுறுத்தியிருக்கின்றனர். இதேவேளை, ஒரு சீனா என்னும் நிலைப்பாட்டில், இலங்கை தொடர்ந்தும் உறுதியாக இருப்பதாகவும் தெரிவித்திருக்கின்றனர். இந்த ஆண்டு ஆரம்பத்தில், இலங்கைக்கு விஜயம் செய்திருந்த சீன வெளிவிவகார அமைச்சர் வோங் ஜி, இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையிலான உறவில் முன்றாவது நாடுகள் தலையீடு செய்யக்கூடாதென்று தெரிவித்திருந்தார். இப்போது, ஐக்கிய நாடுகள் சபை, சீனாவின் உள்விவகாரங்களில் தலையீடு செய்யக்கூடாதென்று இலங்கை வலியுறுத்துகின்றது. இதனை எவ்வாறு
புரிந்துகொள்வது?
கோட்டாபய ராஜபக்ஷ, அநுராதபுரம் – ருவான் வெலிசாயவில் பதவிப் பிரமாணம் செய்துகொண்டு உரையாற்றும்போது, தனது அரசாங்கத்தின் வெளிவிவகாரக் கொள்கை தொடர்பில் பிரஸ்தாபித்திருந்தார். அதாவது, நாங்கள் நடுநிலையான வெளிவிவகாரக் கொள்கையை பின்பற்றவுள்ளோம் – நாங்கள் ஒரு சிறிய நாடு எனவே, அதிகார தரப்புக்களின் போட்டிக்குள் வரவிரும்பவில்லையென்று குறிப்பிட்டிருந்தார். ஆனால், இப்போது, ‘ஒரு சீனா’ என்னும் சீன நிலைப்பாட்டுக்கு தாம் ஆதரவாக இருப்பதாகக் கூறியி ருப்பதன் மூலம், இலங்கை அதிகார தரப்புக்களின் போட்டிக்குள் மூக்கை நுழைத்திருக்கின்றது. மேற்கு நாடுகளுக்கும் முக்கியமாக, அமெரிக்காவுக் கும் சீனாவுக்கும் இடையிலான முரண்பாடுகளுக்குள் கொழும்பு தேவை யற்ற வகையில் மூக்கை நுழைக்கின்றது.
தாய்வானின் சுயாதீனத்தை, சீனா தொடர்ந்தும் எதிர்த்து வருகின்றது. தாய்வான் விடயத்தில் தலையீடு செய்தால், இறுதியில் மரணத்திலேயே முடிவுறும் என்று அண்மையில் சீன இராணுவத் தளபதி தெரிவித்திருந்தார். ஆனால், தாய்வானின் சுயாதீனத்துக்கு தொடர்ந்தும் அமெரிக்கா ஒத்து ழைக்குமென்று, அமெரிக்க ஜனாதிபதி அறிவித்திருக்கின்றார். தாய் வானையும் உள்ளடக்கிய, சீனாவின் ஒரு சீனக் கொள்கையை அமெரிக்கா எதிர்த்து வருகின்றது. மேற்குலக நாடுகளும் தாய்வானின் சுயாதீனத்தை ஆதரித்து வருகின்றன. இந்த நிலையில், எதிர்காலத்தில் தாய்வானை அடிப் படையாகக் கொண்டு, ஆசியாவில், யுத்த முனையொன்று, திறக்கப்படலா மென்றும் கணிக்கப்படுகின்றது. அதாவது, தற்போது இடம்பெற்றுவரும் ரஷ்ய – உக்ரைன் யுத்தம் போன்று.
நிலைமைகள் இவ்வாறிருக்கின்ற போது, இலங்கையின் தூதுக் குழு, ஒரு சீனக் கொள்கையை ஆதரிப்பதாக கூறுவதை எந்த அடிப்படையில் புரிந்துகொள்வது? ஒருவேளை சீனா, மனித உரிமைகள் பேரவையில், தொடர்ந்தும் இலங்கைக்கு ஆதரவளித்து வருவதை கணக்கில் கொண்டு, இதனைத் தெரிவித்திருக்கலாமா? அதுதான் விடயமென்றால் ஒரு சீனக் கொள்கையை ஆதரிப்பது தொடர்பில் பேசியிருக்க வேண்டியதில்லை. மொத்தத்தில் வெளிவிவகாரக் கொள்கை விடயத்திலும் கொழும்பு தெளிவாக இல்லை. தடுமாறிக் கொண்டிருக்கின்றது. ரணில் விக்கிரமசிங்க பிரதமராக இருந்தாலும்கூட, வெளிவிவகார விடயங்களை கையாளும் பொறுப்பில், தோவ்வியடைந்த பீரிஸே இப்போதும் இருக்கின்றார்.
அமெரிக்க செனட்டின் வெளிவிவகார குழுவின் தலைவர் டீழடி ஆநநெனெநண அண்மையில், குவாட் நாடுகள் இலங்கையின் நெருக்கடிக்கு உதவ வேண்டுமென்று வலியுறுத்தியிருந்தார். அமெரிக்கா, இந்தியா, ஜப்பான் மற்றும் அவுஸ்திரேலியா ஆகிய நாடுகளே குவாட் நாடுகளாகும். ஆசியா நோக்கிய, அமெரிக்க மூலோபாய நகர்வில், குவாட் ஒத்துழைப்பு மிகவும் முக்கியமானதாகும். ஆனால், தேவையற்ற வகையில் சீனா வின் விடயங்களுக்கு ஆதரவளிக்க முற்படுவதன் மூலம், மேற்குலக
நாடுகளின், இலங்கைக்கான ஆதரவு கேள்விக்கு உள்ளாகலாம். ஆனால், இலங்கையின் வெளிவிவகார அணுமுறைகளை, தமிழ் தேசியர்கள் கூர்ந்து நோக்க வேண்டும். குவாட் நாடுகளை அணுகுவது தொடர்பிலும் தமிழ்த் தரப்புக்கள் சிந்திக்க வேண்டும்.