கொழும்பில் பல பகுதிகளில் இன்று 10 மணிநேர நீர் வெட்டு!

0
167

கொழும்பு மாவட்டத்தின் பல பகுதிகளில் இன்று 10 மணித்தியாலங்கள் நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக, தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது.
அதன்படி, இன்று இரவு 10:00 மணி முதல் நாளை காலை 08:00 மணி வரை நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.
எதுல் கோட்டை, புறக்கோட்டை, பத்தேகம, மீரிஹான, மாதிவெல, தலபத்பிட்டிய, உடஹமுல்ல, எம்புல்தெனிய, நுகேகொடை, பாகொட, விஜேராம சந்தியில் இருந்து 7ஆம் மைல் தூண் வரை மற்றும் அந்த பகுதியின் ஹைலெவல் வீதியின் அனைத்து குறுக்கு வீதிகள், நுகேகொட சந்தியிலிருந்து நாவல திறந்த பல்கலைக்கழகம் வரையான பகுதி மற்றும் கிளை வீதிகளில் உள்ள பகுதிகளில் இவ்வாறு நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.