சர்வகட்சி அரசாங்கம் என்ற பேச்சுக்கள் தற்போது நகைச்சுவையாக மாறியுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் அவர் இவ்வாறு தெரிவித்தார். ஜனாதிபதியின் அதிகாரங்களை குறைத்து பிரதமருக்கு அதிகாரங்களை வழங்கவேண்டும் என்ற கோரிக்கை வலுத்த நிலையில் ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக பதவியேற்றுள்ளார். இந்நிலையில் ஜனாதிபதியின் அதிகாரங்களை குறித்து 19 ஆவது திருத்தத்தை மீண்டும் இந்த அரசாங்கம் கொண்டு வருமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. ஆகவே சர்வகட்சி அரசாங்கத்தில் இணைந்துகொள்வதில் சிக்கல் காணப்படுகிறது. தற்போதைய சூழ்நிலையில் தேர்தலை நடத்த முடியாது. அதற்கு பதிலாக புதிய சக்தி ஒன்று உருவாக்கப்பட வேண்டும் என தெரிவித்துள்ளார்.