புதிய ஜனாதிபதி நாட்டு மக்களை முட்டாள்களாக நினைக்கின்றார்- சமிந்த விஜேசிறி எம்.பி

0
163

புதிய ஜனாதிபதி நாட்டு மக்களை முட்டாள்களாக நினைக்கின்றார். ஒட்டுமொத்த மக்களின் போராட்டமும் புதிய ஜனாதிபதிக்கு நகைச்சுவையாக தெரிவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி தெரிவித்துள்ளார்.

எதிர்க் கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று (31) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

தற்போதைய ஜனாதிபதி, நாட்டில் துன்பப்படும் மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்காக வரவில்லை. மக்கள் எழுச்சியால் நாட்டைவிட்டு வெளியேறியவர்கள் மீண்டும் எதிர்கால அரசியல் அதிகாரத்தை கைப்பற்றும் வகையில் வழிவகை செய்துகொடுப்பதற்காகவே புதிய ஜனாதிபதி செயற்படுகின்றார். அது ஒன்றே அவரது அரசியல் இலக்காக உள்ளது.

ரணில் ராஜபக்ஷ இதற்கு ஒரு சிறிய உதாரணம். மக்கள் ஆணையைப் பெற்று ஆட்சிக்கு வராத ரணில் – ராஜபக்ஷ, திருடர் கும்பலுடன் சேர்ந்து இன்று அந்த திருட்டுக் கும்பலின் பாதுகாப்புக்காக பாதுகாவலராக செயற்படுகின்றார் என்றும் தெரிவித்துள்ளார்.