24 C
Colombo
Friday, November 22, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

யாழில் செஞ்சிலுவை சங்கத்தால் இரத்ததான முகாம் இடம்பெற்றது.

யாழ் மாவட்ட இலங்கை செஞ்சிலுவை சங்கத்தின் கரவெட்டி கிளையின் ஒழுங்குபடுத்தலில் இரத்ததான முகாம் மூத்த விநாயகர் கோவிலடி மண்டபத்தில் இடம்பெற்றது. குறித்த இரத்ததான முகாம் இலங்கை செஞ்சிலுவை சங்கத்தின் கரவெட்டி கிளை தலைவர் எஸ்.ரகுபரன் தலைமையில் இடம்பெற்றது. இரத்ததான முகாமில் பொதுமக்கள் இராணுவத்தினர் என 38 பேர் இரத்தம் வழங்கியிருந்தனர். குறித்த குருதியை பெற்றுக்கொள்வதற்காக பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையின் இரத்த வங்கி பிரிவினர் சமூகமளித்து குருதியை பெற்றுக்கொண்டனர். குறித்த இரத்த தான முகாமை இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் கரவெட்டி கிளை தலைவர் எஸ்.ரகுபரன். செயலாளர் பகீரதன். நிர்வாக உறுப்பினர் என்.நாகேந்திரன் ஆகியோர் இணைந்து ஏற்பாடு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles