ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு வந்த தொலைபேசி அழைப்பு

0
273

ஐக்கிய அரபு இராச்சியத்தின் ஜனாதிபதி ஷேக் மொஹமட் பின் சைட் அல் நயான் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு தொலைபேசி அழைப்பொன்றை மேற்கொண்டுள்ளார்.

ஜனாதிபதியாக பதவியேற்றுள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு அவர் வாழ்த்து தெரிவித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இரு நாடுகளுக்குமிடையிலான இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவதற்கும், இலங்கை எதிர்நோக்கும் சிரமங்களைக் கடந்து நிலையான மற்றும் அமைதியான சூழலை அடைவதற்கு உதவுவதற்கும் தேவையான நடவடிக்கைகள் குறித்து இரு ஜனாதிபதிகளும் கவனம் செலுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.