அஹங்கம பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் ஒருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த சம்பவம் அஹங்கம பிரதேசத்தில் உள்ள உணவகம் ஒன்றில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மிதிகம பிரதேசத்தைச் சேர்ந்த 40 வயதுடைய ஒருவரே இவ்வாறு சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.
நேற்று இரவு இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த மற்றைய நபர் கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
துப்பாக்கிச்சூட்டுக்கான காரணம் அல்லது சந்தேக நபர்கள் தொடர்பான மேலதிக தகவல்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை.