பிறரின் கியு.ஆர் குறியீடுகளை திருடி எரிபொருளை பெற்றுக்கொள்ளும் சம்பவங்கள் பதிவு!

0
216

எரிபொருள் நிரப்புவதற்கு பிறரின் கியு.ஆர் குறியீடுகளை திருடி எரிபொருள் ஒதுக்கீட்டை மோசடியான முறையில் பெற்றுக்கொள்ளும்
சம்பவங்களை தடுக்க எதிர்காலத்தில் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என இலங்கை தகவல் மற்றும் தொடர்பாடல்
தொழில்நுட்ப முகவர் நிலையம் தெரிவித்துள்ளது.
இவ்வாறான நிலைமைகளை குறைப்பதற்கு தேவையான தொழில்நுட்ப பின்னணியை தமது நிறுவனம் தயாரித்து வருவதாக
இலங்கை தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிலையத்தின் பணிப்பாளர் தசுன் ஹகொட தெரிவித்துள்ளார்.
கியு.ஆர் குறியீட்டில் பதிவு செய்யப்பட்ட வாகனத்தை வேறொருவர் கொள்வனவு செய்தால் அவரிடமிருந்து கியு.ஆர் பதிவினை
அழித்துவிட்டு பெற்றுக்கொள்ளுமாறும் இலங்கை தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிலையத்தின் பணிப்பாளர்
அறிவுறுத்தியுள்ளார்.