மோசடியான முறையில் ஆக்கிரமிக்கப்பட்ட காணிகள் தொடர்பில் ஆராய்வு

0
244

மோசடியான முறையில் அல்லது போலியான உறுதிப்பத்திரங்களால் ஏமாற்றப்பட்டு பாதிக்கப்பட்ட காணி உரிமையாளர்களுக்கு, தேவையான உதவிகளை வழங்க வடக்கு மாகாண ஆளுநர் அலுவலகம் நடவடிக்கை எடுத்துள்ளது.காணி விவகாரம் தொடர்பில் வடக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்தால், அனுப்பி வைக்கப்பட்டுள்ள ஊடக அறிக்கையில் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது. தமது காணியில் மோசடியாகஆக்கிரமிக்கப்பட்ட அல்லது போலியான உறுதிப்பத்திரங்களால் ஏமாற்றப்பட்ட காணி உரிமையாளர்கள், மீள் உரிமை கோரல் ஆதாரங்களுடனும், காணிப் பதிவு பற்றி விபரங்கள் தெரியுமாயின், பழைய பூங்கா வீதியில் உள்ள ஆளுநர் அலுவலகத்திற்கு தெரியப்படுத்துமாறும், அவை தொடர்பான உதவிகளை மக்களுக்கு வழங்கவுள்ளதாகவும், ஆளுநர் அலுவலகத்தின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.