விமான பற்றுசீட்டு கட்டணம் அதிகரிப்பு!

0
126

இலங்கையில் விமான பற்றுசீட்டு கட்டணம் உச்சக்கட்ட அதிகரிப்பை சந்தித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
விமான பற்றுசீட்டு கட்டணம் அமெரிக்க டொலருக்கு நிகராக அறிவிக்கப்படுதல், கட்டுநாயக்க விமான நிலையத்தினுள் விமானங்களுக்காக எரிபொருள் தட்டுப்பாடு, விமான நிலைய கட்டண அதிகரிப்பு போன்ற பல காரணங்கள் இவ்வாறு விமான பற்றுசீட்டு அதிகரிப்பதற்கு காரணம் என தெரிவிக்கப்படுகின்றது.

இதன் காரணமாக இலங்கைக்கு வரும் விமானங்களின் எண்ணிக்கை சுமார் 60 சதவீதம் குறைந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

இந்நிலைமை இலங்கையில் உள்ள சுற்றுலாத் துறையையும், இலங்கையை விட்டு வெளிநாடுகளுக்கு தொழிலுக்கு செல்லும் மக்களையும் மோசமாகப் பாதித்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.