நாட்டை நெருக்கடிகளிலிருந்து மீட்டெடுக்க சர்வகட்சி வேலைத்திட்டமே அவசியம் – திஸ்ஸ அத்தநாயக்க

0
124

நாடு தற்போது எதிர்கொண்டு இருக்கும் நெருக்கடி நிலைமைகளிலிருந்து மீள்வதற்கு சர்வகட்சி வேலைத்திட்டமே அவசியம் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்துரைக்கும்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார, அரசியல், சமூக நெருக்கடிகளை தீர்ப்பதற்கு சர்வகட்சி வேலைத்திட்டம் அவசியம் என்ற நிலைப்பாட்டில் மக்கள் உள்ளனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.