வாகனப் பாதுகாப்பு நிலையத்தில் முறைகேடு

0
175

யாழ்ப்பாணம் நல்லூர்க் கந்தசுவாமி ஆலய மஹோற்சவத்தை முன்னிட்டு, பருத்தித்துறை வீதியில் அமைக்கப்பட்டிருந்த வாகனப் பாதுகாப்பு நிலையத்தில், நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்திற்கு மேலாக கட்டணம் வசூலிக்கப்பட்டமையால், வாகனப் பாதுகாப்பு நிலையம் மூடப்பட்டுள்ளது. யாழ்.மாநகர சபைக்கு குறித்த வாகனப் பாதுகாப்பு நிலையத்தில் இடம்பெறும் மோசடி சம்பவங்கள் தொடர்பில் முறைப்பாடுகள் கிடைத்திருந்தன. முறைப்பாடு தொடர்பில் ஆராய்ந்தபோது, யாழ்.மாநகர சபையினால் அறிவிக்கப்பட்ட கட்டணத்திற்கு மேலதிகமாக, அதிக கட்டணம் அறவிட்டமை, மாநகர சபையின் அங்கீகாரம் பெறாத சிட்டைகளை வழங்குதல் போன்ற முறைகேடுகள் இனங்காணப்பட்டன. இதனையடுத்து மாநகரசபையினர் வாகனப் பாதுகாப்பு நிலையத்தை மூடி, தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தனர்.