மிக் ஒப்பந்தத்தில் ஈடுபட்ட தரப்பினரை விட்விட்டு தன்மீதே குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளதாக ரஷ்யாவின் முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்க தெரிவித்துள்ளார்.
மிக் ஒப்பந்தம் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக இன்று கொழும்பு குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் அவர் முன்னிலையாகியிருந்தார்.
மிக் ஒப்பந்தம் தொடர்பிலான குற்றச்சாட்டு 2006ஆம் ஆண்டு முதல் முன்வைக்கப்பட்டு வருகின்றது.
நல்லாட்சி அரசாங்கத்தின் ஆட்சி முடிந்து ஐந்து வருடங்கள் கடந்துவிட்டன.
கோட்டாபய ராஜபக்ஷ ஆட்சிக்கு வந்து இரண்டு வருடங்கள் கடந்துவிட்டன.
எனவே ஏழரை வருடங்களாக இந்த குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டு வருகின்றது.
இந்தக் குற்றச்சாட்டுக்களை நிருபித்தக்கொள்ள முடியாது விசாரணைகள் தொடர்கின்றன.
எனவே மீண்டும் வந்து வாக்குமூலமளிக்குமாறு நீதிமன்றத்தினால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைவாக மீண்டும் வாக்குமூலமளித்து இருக்கின்றேன்.
இதற்கு முன்பு 10 நாட்கள் வாக்குமூலம் அளிக்கப்பட்டுள்ளது.
10 நாட்கள் அளித்த வாக்குமூலங்களில் ஒரு காரணத்தையாவது நீதிமன்றத்தில் முன்வைக்கவில்லை.
எனினும் நீதிமன்றத்துக்கு வந்து நல்லாட்சி அரசாங்கம் போலவே பொய்யுரைக்கின்றனர்.
எனவே அந்த பொய்களுக்கு பதிலளிப்பதற்காகவே வந்தேன்.
அந்தக் காலப்பகுதியில் தேவையின் அவசியத்தை கருத்திற்கொண்டே மிக் ஒப்பந்தத்தை விமானப்படை செய்துகொண்டது. நான் கொடுக்கல் வாங்கலில் ஈடுபடவில்லை.
எனினும் என் மீதே இன்று அனைத்து குற்றச்சாட்டுக்களும் முன்வைக்கப்படுகின்றன.
விமான்படைத் தளபதி மீது குற்றசாட்டுக்கள் வைக்கப்படவில்லை. பாதுகாப்பு செயலாளர் மீது குற்றச்சாட்டுக்கள் வைக்கப்படவில்லை. இந்தத்துடன் தொடர்புடைய 23 பேர் இருக்கின்றனர். அவர்களுக்கு எதிராக எந்த குற்றச்சாட்டுக்களும் முன்வைக்கப்படவில்லை. அவர்கள் நல்லாட்சி அரசாங்கத்திலும் பணியாற்றினார்கள். தற்போதைய அரசாங்கத்திலும் பணியாற்றுகின்றார்கள்.
ஆனால் என் மீதே குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு தொடர்ச்சியாக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.