பாரிய பிரச்சினைகளில் ஒரு சில பிரச்சினைகளுக்கு தீர்வு பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளது- திஸ்ஸ குட்டியாராச்சி எம்.பி

0
146

நாடு எதிர்கொண்டு இருக்கும் பாரிய பிரச்சினைகளில் ஒரு சில பிரச்சினைகளுக்கு தீர்வு பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளது என்று ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ குட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தலைமையகத்தில் இன்று (18) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

வரிசை யுகம், சட்டரீதியான விடயங்கள், முன்னாள் ஜனாதிபதி பதவி விலகி சென்றமை, பிரதமர் நியமனம் அமைச்சரவை பதவி விலகி சென்றமை போன்ற விடயங்களால் சர்வதேச ரீதியில் எமது நாடு பேசுபொருளானது.

இவ்விடயங்கள் தொடர்பிலேயே நாங்கள் கடந்த காலங்களில் பேசினோம். பார்த்தோம்.

நாட்டில் நூற்றுக்கு நூறுசதவீதம் பிரச்சினைகள் தீர்க்கப்படாவிட்டாலும் முக்கியமான பிரச்சினைகளுக்கு தீர்வு பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக கடந்த காலங்களில் எரிவாயு பிரச்சினை பாரிய பிரச்சினையாகக் காணப்பட்டது. எனினும் அந்த பிரச்சினைக்கு நூற்றுக்கு நூறு சதவீதம் தீர்வு கிடைக்காவிட்டாலும் ஓரளவு தீர்வு கிடைத்துள்ளது.

நுகர்வோருக்கு தேவையானளவு எரிவாயு விநியோகிக்கும் செயற்பாடு தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

சகல கிராமங்களுக்கும் எரிவாவு விநியோகம் முன்னெடுக்கப்படுகின்றது.

நாடு பொருளாதார ரீதியில் பின்னடைவை எதிர்கொண்டுள்ள இந்த சந்தர்ப்பத்தில் மொட்டுக் கட்சியின் அரசாங்கம் காரணமாகவே நாடு சீரழிவை எதிர்கொண்டுள்ளது என்று எம்மீது குற்றச்சாட்டுக்களை முன்வைக்கின்றனர்.

எனினும் அந்தக் குற்றச்சாட்டுக்களை எம்மீது முன்வைக்கும் வேளையில் அந்தக் குற்றச்சாட்டுக்களிலிருந்து தப்பிச் செல்லாது அது தொடர்பில் கதைத்துக்கொண்டு இருக்காது நாம் அதற்கான பதில்களை தேடிக்கொண்டு இருக்கின்றோம்.

எனவே உலகளாவிய பொருளாதார நெருக்கடிக்கு மத்தியிலும் எமது நாடு பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டு இருக்கும் சூழலிலும் டொலர் பிரச்சினைக்கு மத்தியிலும் எரிவாயு பிரச்சினையை தீர்ப்பதில் நாம் வெற்றிக்கொண்டுள்ளோம் என்பதை மிகவும் தெளிவாகக் கூறிக்கொள்ள விரும்புகின்றோம்.

அடுத்ததாக எரிபொருள் பிரச்சினை. எரிபொருள் தட்டுப்பாட்டுக்கு நூற்றுக்கு நூறுசதவீத தீர்வை எம்மால் பெற்றுக்கொடுக்க முடியாமல் போனாலும் அந்த பிரச்சினைக்கு ஓரளவு தீர்வு பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளது.

எரிபொருள் பிரச்சினையை தீர்ப்பதற்கான நிர்வாகத் திட்டத்தை எமது அரசாங்கம் ஏற்கெனவே முன்வைத்துள்ளது.