கிவ்.ஆர் முறைமை தொடர்பில் விமர்சிக்கின்றனர். ஆனால், நாடு தற்போது எதிர்கொண்டு இருக்கும் நெருக்கடிகளை சமாளிப்பதற்கு அரசாங்கம் திட்டமிட்ட வெற்றிகரமான நடவடிக்கைள முன்னெடுத்து வருகின்றது என்று பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் பண்டார தெரிவித்துள்ளார்.
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தலைமையகத்தில் இன்று (18) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவை நாம் ஸதாபிக்கும்போது நாட்டில் காணப்படும் பிரதானமான ஐந்து பிரச்சினைகளை கட்சியின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ஷ இனங்கண்டுகொண்டார்.
இந்த ஐந்து பிரச்சினைகளும் இலங்கையானது ஒவ்வொரு காலத்திலும் முகங்கொடுத்து வந்த பிரச்சினைகளாகக் காணப்படுகின்றன.
இந்த நாட்டில் இளைஞர்களின் எதிர்பார்ப்பு என்ன என்பதே முதலாவது விடயமாகும்.
அடுத்ததாக எமது பொருளாதாரத்தை எவ்வாறு புதுப்பித்துக்கொள்வது என்ற கேள்வியை முன்வைத்தார்.
எமது நாட்டின் கல்வியை எவ்வாறு மறுசீரமைப்பது என்ற கேள்வியையும் அவர் முன்வைத்தார்.
இவ்வாறான பிரச்சினைகளை அடிப்படையாக வைத்துக்கொண்டே ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் அரசியல் கொள்கையை அவர் வகுத்தார்.
அதன் காரணமாகவே 74 வருடங்களாக எந்த அரசியல் கட்சியும் நினைத்துப் பார்க்க முடியாத ஒரு இடத்துக்கு ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவால் செல்ல முடிந்தது. அதனால்தான் பல வெற்றிகளையும் பெற்றது.
எனவே நாடு தற்போது எதிர்கொண்டுள்ள பிரச்சினைகளுக்கும் பதிலை தேடுவதற்கான இயலுமை ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவுக்கு இருக்கின்றது.
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன என்பது தோற்கடிக்கப்படாத கட்சியாகும்.
எனவே ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவை குறைத்து மதிப்பிடுபவர்களிடம் தற்போதைய கேள்விகளுக்கு பதில் இருக்கின்றதா என்றே கேட்கின்றேன்;.