எரிவாயு விலை அதிகரிப்பு மற்றும் விலை மாற்றம் தொடர்பில் முழுயைமான விளக்கத்தை லாப் நிறுவனம் வழங்க வேண்டும் என்று, வர்த்தக, வணிக மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சு நளின் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று (18) ஊடகங்களுக்கு கருத்துரைக்கும்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
லாப் எரிவாயுவின் விலை குறைக்கப்பட்டுள்ளது.
இந்த விலை குறைப்புடன் குறித்த நிறுவனத்துடன் கலந்துரையாடி லாப் எரிவாயு விலை அதிகரிப்பு மற்றும் மாற்றம் தொடர்பிலான விளக்கத்தை பெற்றுக்கொள்ளுமாறு நுகர்வோர் அதிகார சபை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளேன்.
எரிவாயு விலை அதிகரிப்பு மற்றும் மாற்றம் தொடர்பில் முழுயைமான விளக்கத்தை லாப் நிறுவனம் வழங்க வேண்டும்.
எதற்காக இந்த விலை அதிகரிப்பு மேற்கொள்ளப்படுகின்றது என்பதுத் தொடர்பில் தெளிவுப்படுத்த வேண்டும்.
லிற்றோ நிறுவனமும் தங்களுக்கான இலாபத்தை வைத்துக்கொண்டே எரிவாயு விநியோகத்தை முன்னெடுக்கின்றது.
எனவே லாப் நிறுவனம் எரிவாயு விலை அதிகரிப்பு தொடர்பில் தெளிவான விளக்கத்தை வழங்க வேண்டும். அவ்வாறு விளக்கமளிக்கப்படும் பட்சத்தில் நுகர்வோர் அதிகார சபை அதிகாரிகள் அது தொடர்பில் ஆராய்ந்துப்பார்த்து எமக்கு தகவல் தருவர். அதன் பின்பு நடவடிக்கைகளில் ஈடுபட முடியும்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சகல கட்சிகளுக்கும் அழைப்பு விடுத்து கட்சிகளுடன் நீண்ட கலந்துரையாடல்களை மேற்கொண்டு நாட்டை கட்டியெழுப்புவதற்கான வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதற்கு தேவையான ஒத்துழைப்பை வழங்குமாறு கோரிக்கை விடுத்தார்.
அதற்கமைவாக சகல கட்சிகளும் தங்களது யோசனைகளை முன்வைத்துள்ளன. எனவே நாட்டை பொருளாதார நெருக்கடியிலிருந்து மீட்டெடுப்பதற்கு சகல கட்சிகளும் ஒத்துழைப்பு வழங்கும் என்று எதிர்பார்க்கின்றோம்.
பொறுப்புகளைக் ஏற்றுக்கொள்ளக்கூடிய தரப்பினர் நிச்சியமாக அரசாங்கத்துடன் ஒன்றிணைவார்கள்.
அதேபோன்று பாராளுமன்ற குழுக்களில் அங்கம் வகிக்கும் தரப்பினரும் எமக்கு ஒத்துழைப்பு வழங்கி செயற்படுவார்கள்.