கண்டி, பேராதனை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கலஹா வீதி, பேராதனை பகுதியில் மூன்று மாடி கட்டடமொன்று தீக்கிரையாகியுள்ளது.
பேராதனை பொலிஸார், கண்டி மாநகரசபையின் தீயணைப்புப் பிரிவினர் மற்றும் பிரதேச மக்கள் இணைந்து தீயை கட்டுப்பாட்டுக்குள் கெபாண்டு வந்துள்ளனர்.
தீ விபத்தில் ஒருவருக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை. எனினும் கட்டடத்தின் ஒரு பகுதி சேதமடைந்துள்ளது.
தீ விபத்துக்கான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில் பேராதனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.