பேருந்துகளுக்கான புதிய அட்டை முறை அறிமுகம்

0
152

போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தனவினால் பொதுமக்களின் நலன் கருதி பேருந்துகளுக்கான புதிய முற்கொடுப்பனவு அட்டை முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கமைய தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் காலி வரை பயணிக்கும் பேருந்துகளுக்காக கொட்டாவ-மகும்புர மல்டிமோடல் பகுதியில் முன்பணம் செலுத்தப்பட்ட பேருந்து அட்டை முறை அறிமுகப்படுத்தப்பட்டது. பொதுமக்கள் தங்கள் பயணத்திற்குத் தேவையான தொகையை முன்கூட்டியே செலுத்தி பேருந்து அட்டையையும் பயன்படுத்த முடியும் எனவும் அமைச்சர் தெரிவித்தார். மேலும் தற்பொழுது பேருந்து அட்டை மக்கள் வங்கியில் கீழ் மட்டுமே விநியோகிக்கப்படுகின்றது எனவும் அவர் தெரிவித்தார்.