இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்டாலினிடம் வாக்குமூலம் பதிவு செய்வதற்காக அவர் இன்று (23) முகத்துவாரம் பொலிஸ் நிலையத்திற்கு அழைக்கப்பட்டுள்ளார்.
ஜூலை 13ஆம் திகதி ஜனாதிபதி செயலகத்தில் கூட்டம் நடத்தியமை மற்றும் கூட்டத்தில் வெளியிட்ட கருத்துக்கள் தொடர்பில் வாக்குமூலம் பதிவு செய்வதற்காகவே அவர் முகத்துவாரம் பொலிஸ் நிலையத்திற்கு அழைக்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பாக அவர் மீதான வழக்கு நாளை (24) இடம்பெறவுள்ளதால், இது குறித்து நீதிமன்றில் அறிக்கை சமர்ப்பிக்குமாறும் பொலிஸார் அவருக்கு அறிவித்துள்ளனர்.
இந்நிலையில் வாக்குமூலம் அளித்துவிட்டு பொலிஸ் நிலையத்திலிருந்து வெளியேறிய அவர் ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில்,