கொழும்பு கல்கிஸை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ரத்மலானை பிரதேசத்தில், மசாஜ் நிலையம் என்ற பெயரில் நடத்தி செல்லப்பட்ட விபச்சார விடுதி முற்றுகையிடப்பட்டுள்ளதுடன் மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
விபச்சார விடுதியை நடத்தி வந்த 42 வயது நபரும் பொல்கஹவெல, தனமல்வில ஆகிய பிரதேசங்களை சேர்ந்த 25, 28 வயதுகளையுடைய இருவரே இரு பெண்களுமே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
பொலிஸாருக்கு வழங்கப்பட்ட இரகசிய தகவலையடுத்து மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போதே குறித்த மூவரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.