28.4 C
Colombo
Saturday, September 21, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

சுகாதார அமைச்சின் முக்கிய அறிவிப்பு!

மருந்துகளை இறக்குமதி செய்யும் கொள்முதல் செயல்முறையை வினைத்திறனாக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். மருந்துகளை இறக்குமதி செய்வதற்கு 9 முதல் 11 மாதங்கள் வரையிலான கொள்முதல் நடவடிக்கைகள் தற்போது 3 முதல் 4 மாதங்களாக குறைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார். அதிக வெளிப்படைத்தன்மையைப் பாதுகாப்பதன் மூலம் நோயாளிகளுக்கு தட்டுப்பாடு இன்றி தொடர்ச்சியாக மருந்துகளை வழங்குவதே இதன் முக்கிய நோக்கமாகும் என  UNICEF இன் பிரதிநிதிகள் குழுவுடனான சந்திப்பின் போது அமைச்சர் குறிப்பிட்டார். நாட்டில் மருந்து தட்டுப்பாடு படிப்படியாக குறைவடைந்துள்ளதாக சுட்டிக்காட்டிய அமைச்சர், எதிர்வரும் சில வாரங்களில் மேலும் குறைவடையும் எனவும் தெரிவித்தார். அத்துடன், பற்றாக்குறையாக உள்ள மருந்துகளை உடனடியாக பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல மேலும் சுட்டிக்காட்டியுள்ளார். இதேவேளை, அரசாங்கத்தின் மத்திய மருந்துக் களஞ்சியத்தில் கடந்த வாரம் முதல் 91 அத்தியாவசிய மருந்துகளின் கையிருப்பு தீர்ந்துவிட்டதாக அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. எனினும் இது தொடர்பில் அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என சங்கத்தின் செயலாளர் வைத்தியர் ஹரித அலுத்கே தெரிவித்துள்ளார்.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles