27.8 C
Colombo
Saturday, September 21, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

கிரானில் பாடசாலை மாணவர்களுக்கான
கற்றல் உபகரணங்கள் வழங்கல்

மட்டக்களப்பு மாவட்டம் கிரான் பிரதேச செயலாளர் பிரிவு பொண்டுகள்சேனை கணபதி வித்தியாலம் மற்றும் முறக்கொட்டான் சேனை இராம கிருஸ்ன மிசன் வித்தியாலய மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டன.
தரம் 1 முதல் தரம் 8 வரையான 57 மாணவர்களுக்கும் மற்றும் முறக்கொட்டான் சேனை இராம கிருஸ்ன மிசன் வித்தியாலய தரம் 1 தொடக்கம் தரம் 11 வரையான 88 மாணவர்களுக்கும் கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன.

இக்கற்றல் உபகரணங்களை இணைந்த கரங்களின் மாவட்ட அமைப்பாளர்களான லோ.கஜரூபன் , கண்ணன் , சங்கீத், டெரித்,ரிஸ்வான் ஆகியோர் இணைந்து வழங்கினர்.புலம்பெயர் உறவுகள் மற்றும் நன்கொடையாளர்களின் நிதியுதவியில் சுமார் 145 மாணவ மாணவிகளுக்கு மூன்று இலட்சம் ரூபா (300000) பெறுமதியுடைய கற்றல் உபகரணங்கள் இதன்போது வழங்கி வைக்கப்பட்டது.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles