27 C
Colombo
Friday, October 18, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

மட்டு.சித்தாண்டிபதி சித்திர வேலாயுத
சுவாமி கோவில் வருடாந்த உற்சவம்

கிழக்கிழங்கையில் வரலாற்றுச் சிறப்புப் பெற்றதும் சிகண்டி முனிவரினால் பூசிக்கப்பட்ட வேலுடைய சித்தாண்டி அருள்மிகு ஸ்ரீ வள்ளி குஞ்சரி சமேத ஸ்ரீ சித்திர வேலாயுத சுவாமி கோவிலின் வருடாந்த மகோற்சவத்தின் திருகொடியேற்ற உற்சவம் நேற்று ஆரம்பமானது.

ப்ரமோற்ச பிரதமகுரு சிவஸ்ரீ.கைலாசநாத வாமதேவ குருக்கள் தலைமையில் இடம்பெற்ற பூஜை வழிபாடுகள் முன்னெடுக்கப்பட்டது.

நேற்று காலை விநாயகப் பூசை இடம்பெற்றதுடன், தொடர்ந்து ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமி கோயிலுக்குச் சொந்தமான வயற்காணியில் இருந்து நவதானிங்கள் இடுவதற்கான விளக்குமண் எடுத்து வரப்பட்டது.

இம்முறை முதன்முதலாக கோவில் கொடியேற்றச் கொடிச்சீலை பாரம்பரியமாக விசேட மேளதாளவாத்தியங்கள் முழங்க முச்சந்திப் பிள்ளையார் ஆலயத்தில் இருந்து ஆலயத்தின் தலைவரான வன்னியனார் தலையில் கொடிச்சீலையை வைத்து வண்ணக்குமார் உள்ளிட்ட நிருவாகம் பூடைசூழ அரோகரா கோசத்துடன் ஆலயத்திற்கு கொடிச் சீலை கொண்டுவரப்பட்டு ஆலய உள்வீதி வலம்வந்து கொடியேற்ற பூசைகள் இடம்பெற்றது.

வசந்தமண்டபத்தில் இருந்து பிள்ளையார், வள்ளி தெய்வானையுடன் எழுந்தருளிய சண்முகப்பெருமான், தேவியுடன் எளுந்தருளிய வீரபத்திரர் கொடித்தம்பம் முன்னதாக கொடியேற்ற பூசை இடம்பெற்றதுடன் பக்தர்களின் அரோகரா கோசத்துடன் ஸ்ரீ சித்திர வேலாயுத கோவில் கொடியேற்றம் இடம்பெற்றது.

குடிப்பரம்பரை முறைத் திருவிழாக்களைக் கொண்ட 16நாள் திருவிழாவில்,07,08,09 ஆகிய திகதிகளில் வரும் மூன்று நாட்களும் அதிவிசேட மயில்கட்டுத் திருவிழாக்களாக இடம்பெறவுள்ளது.

நேற்றைய கொடியேற்ற உற்சவத்துடன் ஆரம்பமாகி 16 நாட்கள் நடைபெற்று வரும் திருவிழாவில் 16வாது நாளான எதிர்வரும் 10ஆம் திகதி சித்தாண்டி உதயன்மூலையில் அமைந்துள்ள சரவணப்பொய்கைபிரணவத் தீர்த்தோற்சவத்துடன் ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமி கோயில் வருடந்த மகோற்சவப் பெருவிழா நிறைவயைவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles