ஆளும் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சி தலைவர்களின் கூட்டம் இன்று நடைபெறவுள்ளது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் பிரதமர் தினேஷ் குணவர்தன ஆகியோர் தலைமையில் மாலை 4.00 மணியளவில் நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் இந்தக் கூட்டம் இடம்பெறவுள்ளது. சந்திப்பில் தற்போதைய அரசியல் நிலவரம் மற்றும் அரசாங்கத்தின் எதிர்கால திட்டங்கள் குறித்து ஆராயப்படவுள்ளது. இதேவேளை நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சித் தலைவர்களின் கூட்டம் இன்று மாலை 5.00 மணிக்கு நடைபெறவுள்ளது. ஜனாதிபதி மற்றும் சபாநாயகர் தலைமையில் நாடாளுமன்ற வளாகத்தில் இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஆளுங்கட்சி தலைவர்களின் கூட்டம் இன்று
0
108