அதிக விலைக்கு முட்டையை விற்ற வர்த்தகருக்கு அபராதம்

0
126

பலாங்கொடை நகரிலுள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் முட்டைகளை நிர்ணயிக்கப்பட்ட விலையை விட அதிக விலைக்கு விற்பனை செய்தமைக்காக வர்த்தகர் ஒருவருக்கு ஐந்து இலட்சம் ரூபா அபராதம் விதித்து பலாங்கொடை பதில் நீதவான் ஏ. ஆமி. எஸ். திருமதி மெனிகே உத்தரவிட்டார். குறித்த வர்த்தகர் 4 வெள்ளை முட்டைகளை 260 ரூபாய்க்கு விற்பனை செய்திருந்தார். ஒரு முட்டைக்கு 65 ரூபாய் வீதம் நான்கு முட்டைகளுக்கு 260 ரூபா அறவிடப்பட்டுள்ளதாக நுகர்வோர் அதிகாரசபை அதிகாரிகள் தெரிவித்தனர்.