இலங்கைக்கு அவசர கடனுதவி வழங்குவது தொடர்பில் சர்வதேச நாணய நிதியம் அடிப்படை நிர்வாக மட்ட உடன்பாட்டை எட்டியுள்ளதாக ரொய்ட்டர்ஸ் செய்தி சேவை தெரிவித்துள்ளது.
வரலாற்றில் மிக மோசமான பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கியுள்ள இலங்கை, சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து 03 பில்லியன் டொலர் கடனைப் பெறுவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளதாக ரொய்ட்டர்ஸ் செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.