28.5 C
Colombo
Saturday, September 21, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

வாகரை பிரதேச மக்கள் பிரதேச
செயலகத்திற்கு முன்பாக போராட்டம்

மட்டக்களப்பு வாகரை பிரதேசத்தின் களப்பு பகுதிகளில் அமைக்கத் திட்டமிடப்படும் இறால் பண்ணைக்கு எதிர்ப்பு தெரிவித்து பிரதேச மக்கள் வாகரை திருமலை வீதியில் பிரதேச செயலகத்திற்கு முன்பாக ஒன்று கூடி இன்று கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.கடந்த மாhச் மாதம் 21 ஆம் திகதி இது போன்றதொரு ஆர்ப்பாட்டத்தினை பிரதேச மக்கள் மேற்கொண்டதையடுத்து பிரதேசத்தில் இறால் வளர்ப்பு திட்டத்திற்கு என ஒதுக்கப்பட்ட பகுதி நில அளவை செய்யப்படுவது தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்தது.

இந்நிலையில் தற்போது மீண்டும் நில அளவை வேலைத்திட்டம் ஆரம்பிக்ப்பட்டுள்ளாதால் மக்கள் குழப்ப நிலை அடைந்துள்ளனர். இதனைத் தொடர்ந்தே வேலைத் திட்டத்pனை தடுத்து நிறுத்துமாறு தெரிவித்து மீண்டும் இவ் கவனயீர்ப்பு போராட்டம் இன்று முன்னெடுக்கப்பட்டது.வாகரை பிரதேச மக்கள் மற்றும் சிவில் அமைப்புக்களினால் ஏற்பாடு செய்யப்பட்ட இவ் கவனயிர்ப்பு போராட்டத்தில் தட்டுமுனை,புளியங்கண்டலடி,அம்பந்தனாவெளி,பால்சேனை,கதிரவெளி,கட்டுமுறிவு போன்ற இடங்களில் உள்ள மக்கள் கலந்து கொண்டு குறித்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

குறித்த விடயம் தொடர்பாக சம்பவ இடத்திற்கு வருகைதந்த மட்டக்களப்பு மாவட்ட ஜக்கிய தேசிய கட்சி அமைப்பாளர் கே.லிங்கராசா மற்றும் வாகரை பிரதேச செயலக உதவிப் பிரதேச செயலாளர் பிரணவன் ஆகியோரிடம் கோரிக்கை அடங்கிய மகஜரை கையளித்தனர்.இதன்போது ஜக்கிய தேசிய கட்சி அமைப்பாளர் குறித்த விடயம் தொடர்பாக ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு வந்து தீர்வொன்றினை பெற்றுத் தருவதாக தெரிவித்தார். உதவிப் பிரதேச செயலாளர் குறித்த விடயம் தொடர்பாக மேலதிக நடவடிக்கைக்காக பிரதேச செயலாளரின் கவனத்திற்கு தெரிவிப்பதாக பதில் வழங்கினார்.வழங்கப்பட்ட பதில்கள் ஆரோக்கியமானதாக இல்லை என்ற காரணத்தினால் அவ்விடத்தில் குழப்ப நிலை ஏற்பட்டது.

இது போன்ற நடவடிக்கைகள் இனிமேலும் இடம்பெறாது இருக்க அரச திணைக்களங்கள் செயற்ப்படவேண்டும் என்று தெரிவித்து இவ்விடயத்தினை நீதிமன்ற நடவடிக்கைக்காக செயற்படப் போவதாக தெரிவித்து ஆர்ப்பாட்டக்காரர்கள் கலைந்து சென்றனர்.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles