சீரற்ற காலநிலையால் 55 குடும்பங்கள் பாதிப்பு!

0
111

நாட்டில் பல பகுதிகளிலும் பெய்துவரும் கடும் மழையினால் 55 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
சீரற்ற காலநிலை காரணமாக 3 வீடுகள் முற்றாக சேதமடைந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் இன்று காலை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் 32 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதுடன் சீரற்ற காலநிலை காரணமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 222 ஆக உள்ளது.