விடுதலைப்புலிகளை மீண்டும் தாலாட்டுவதற்கு விக்னேஸ்வரன் முற்படுகின்றாரா: சரத் பொன்சேகா கேள்வி

0
184

தமிழீழ விடுதலைப்புலிகளுக்காகக் குரல் கொடுக்கும் விக்னேஸ்வரன் எம்.பி பைத்தியக்காரராகவே இருக்க வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் மீதான தடை நீக்கப்பட்டது போல், தமிழீழ விடுதலைப்புலிகள் மீதான தடையும் நீக்கப்பட வேண்டும் என தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவர் சி.வி.விக்னேஸ்வரன் கருத்து தெரிவித்திருந்தார்.
இது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே சரத் பொன்சேகா இவ்வாறு குறிப்பிட்டார்.
விடுதலைப்புலிகளை மீண்டும் தாலாட்டுவதற்கு விக்னேஸ்வரன் முற்படுகின்றாரா.
அவருக்கு வயதுபோய் விட்டது.
நீதியரசர் பதவியை வகித்தவரே விக்னேஸ்வரன்.
எதற்காக அவர் இப்படிக் கதைக்கின்றார்.
அவருக்கு பைத்தியம் இருக்க வேண்டும்.
அவர் கூறும் வழியில் எமக்கு டொலர் தேவையில்லை என சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.