ஜனாதிபதி ரணில் விக்கரமசிங்கவால் 8 செயற்குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன

0
118

சீரான முதலீட்டு வாய்ப்புகளை உருவாக்கல் மற்றும் முதலீட்டாளர்களைப் பாதுகாத்தல் என்பனவற்றை நோக்காகக் கொண்டு, ஜனாதிபதியால் 8 செயற்குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன.
ஜனாதிபதி செயலாளர் சமன் ஏக்கநாயக்கவின் தலைமையில் இந்த குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக, ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள ஜனாதிபதி செயலாளர், முதலீட்டாளர்களுக்கு உரித்தான சுற்றுச்சூழலை உருவாக்க அரசாங்கம் மேற்கொண்ட நீண்ட கால முயற்சி வெற்றியளித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
அரசாங்கம் மாற்றம் பெறும் அதன் நல்ல திட்டங்களை முன்னெடுக்காது கைவிடுவது கவலைக்குரிய விடயமாகும் என அவர் தெரிவித்தார்.