காத்தான்குடி ஆறாம் குறிச்சிஅல்ஹிலால்
சனசமூக நிலையத்தினால் கிரிக்கெட் சுற்றுப்போட்டி

0
277

மட்டக்களப்பு காத்தான்குடி ஆறாம் குறிச்சி அல்ஹிலால் சனசமூக நிலையத்தின் ஏற்பாட்டில் காத்தான்குடி
கல்விக் கோட்டத்துக்குட்பட்ட தெரிவு செய்யப்பட்ட பாடசாலை மாணவர்களுக்கான கிரிக்கட் சுற்றுப்போட்டியொன்று காத்தான்குடி விக்டரி விளையாட்டுக்கழக மைதனாத்தில் நேற்று நடைபெற்றது.8கழகங்கள் பங்கு பற்றிய சுற்றுப் போட்டியில்
இறுதிப் போட்டியில் பூநொச்சிமுனை இக்றாஹ் வித்தியாலயத்தின் பழைய மாணவர் அணியும்,கர்பலா அல் மனார் வித்தியாலய பழைய மாணவர் அணியும் மோதின.

இறுதிப்போட்டியில் பூநொச்சிமுனை இக்றாஹ் அணி வெற்றியீட்டியது.அத்துடன் காத்தான்குடி டீன் வீதியைச் சேர்ந்த இரு மாணவிகள் கல்விப் பொதுத்தராதர உயர்; தரப்பரீட்சையில் வர்த்தகப் பிரிவில் மூன்று பாடங்களிலும்; ஏ சித்திகளை பெற்று பல்கலைக்கழகத்துக்கு தெரிவு செய்யப்பட்ட மாணவிகளை ஊக்கப்படுத்தும் வகையிலும் இப்பகுதியின் கல்வி மேம்பாட்டை கருத்திற் கொண்டு மற்றைய மாணவர்களையும் ஊக்கப்படுத்தும் வகையில் இரண்டு மாணவிகளும் பாராட்டி கௌரவிக்கப்பட்டனர்.

அல்ஹிலால் சனசமூக நிலையத்தின் தலைவர் ஏ.எல்.எம்.ரஜப் தலைமையில் நடைபெற்ற இதன் பரிசளிப்பு வைபவத்தில் காத்தான்குடி கோட்டக் கல்விப் பணிப்பாளர் எம்.எம்.கலாவுதீன், காத்தான்குடி நகர சபை உறுப்பினர் கே.எல்;.எம்.பரீட், மண்முனைப் பற்று பிரதேச சபை உறுப்பினர் முகம்மட் நசீம், அல்ஹிலால் சனசமூக நிலையத்தின் செயலாளர் ளெமலவி பாஹீம் ரப்பானி, எம்.அமீர்ஆசிரியர் நிலையத்தின் பொருளாளர் நௌபர்,உப செயலாளர் மௌலவி ஸாஜஹான் ரப்பானி, சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.தாஹீர் மற்றும் சன சமூக அபிவிருத்தி உத்தியோகத்தர் உட்பட அல்ஹிலால் சனசமூக நிலைய உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.