ஓய்வு பெற்ற கல்வியியலாளர்கள்,சமூக சேவையாளர்கள் கௌரவிப்பு

0
176

ஓய்வு பெற்ற கல்வியியலாளர்கள்,சமூக சேவையாளர்கள் கௌரவிப்புஓய்வு பெற்ற கல்வியலாளர்கள்,சமூக சேவையாளர்கள் கௌரவிப்பு நிகழ்வும் விளையாட்டு கழகத்திற்கு நிதியளிப்பு செய்யும் நிகழ்வும் பிறைந்துரைச்சேனை அஸ்ஹர் வித்தியாலய மண்டபத்தில் நடைபெற்றது.பிறைந்துரைச்சேனை மனிதம் நலன்புரி அமைப்பினால் நடாத்தப்பட்ட நிகழ்வில் வாழைச்சேனை பிறைந்துரைச்சேனை பிரதேசத்தில் உள்ள ஓய்வு பெற்ற கல்வியலாளர்,சமூக சேவையாளர்களான முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எஸ்.ஜவாஹிர் சாலி,ஓய்வு பெற்ற கோட்ட கல்வி பணிப்பாளர் எம்.எஸ்.கே.றஹ்மான்,ஓய்வு பெற்ற அதிபர்களான யூ.அஹமட், எம்.எஸ்.சுபைதீன்,எம்.ரீ.எம்.பரீட், பிரதேசத்தின் மூத்த விiளாட்டு வீரர் பி.பிஸ்தாமி ரவூப்,சமூக செயற்பாட்டாளர்களான கே.எம்.ஜிப்ரி,ஏ.எம்.இஸ்மாயில் பிரதேச சபை உறுப்பினர் நபீரா ஆகியோர் கௌரவிக்கப்பட்டனர்.

நிகழ்வில் பிறைந்துரைச்சேனை வேல்ட் ஸ்டார் விளையாட்டுக் கழகத்திற்கு ஐம்பதாயிரம் ரூபாய் பணமும் அன்பளிப்பு செய்யப்பட்டது.ஜெயந்தியாய அஹமட் ஹிறாஸ் வித்தியாலய அதிபர் எம்.ஐ.செயினுலாப்தீன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் மட்டக்களப்பு மத்தி வலய பிரதிக்கல்விப் பணிப்பாளர் எ.ஐ.அஹ்ஸாப்,மட்டக்களப்பு மத்தி வலய உதவிக் கல்விப் பணிப்பாளர் எம்.யூ.எம்.இஸ்மாயில்,காவத்தமுனை மில்லத் வித்தியாலய அதிபர் எச்.எம்.இஸ்மாயில்,பிறைந்துரைச்சேனை அஸ்ஹர் வித்தியாலய அதிபர் எல்.ரி.எம்.சாதிக்கீன் மனிதம் நலன்புரி அமைப்பின் செயலாளர் கே.எல்.சாஜஹான்,இணைப்பாளர் ஏ.எல்.பஸீர் மற்றும் பிரதேச முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டனர்.