PTA சட்டத்தை இரத்து செய்யக் கோரி மன்னாரில் கையேழுத்து திரட்டல்!

0
203

பயங்கரவாத தடுப்புச் சட்டத்தை ரத்து செய்யக் கோரி நாடளாவிய ரீதியில் ஊர்தி வழி போராட்டமாக சென்று கையெழுத்து திரட்டும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், 5 வது நாளாக முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டம் இன்று மன்னாரில் இடம்பெற்றது.

இலங்கைத் தமிழரசுக் கட்சியினுடைய வாலிபர் முன்னணியும், சர்வஜன நீதி அமைப்பும் முன்னெடுத்த கையெழுத்து திரட்டும் பிரச்சார நடவடிக்கையானது மன்னார் மாவட்டத்தில் இலங்கை தமிழரசுக் கட்சியின் இளைஞர் அணியின் செயலாளர் சட்டத்தரணி எஸ்.டினேசன் தலைமையில், மன்னார் நகர பேருந்து தரிப்பிடத்தில் இடம்பெற்றது.
இதன் போது மக்கள், அரசியல் பிரதிநிதிகள் கலந்து கொண்டு பயங்கரவாத தடுப்புச் சட்டத்தை இரத்து செய்யக் கோரி கையொப்பமிட்டு தமது ஆதரவை வழங்கினர்.