மத குருமார்களுக்கும்,மத ஸ்தாபன சபை உறுப்பினர்களுக்குமான தகவல் அறியும் உரிமைச்சட்டம் தொடர்பான பயிற்சியும் அதனோடு இணைந்த விழிப்புணர்வு வேலைத்திட்டமும் இன்ரநெசனல் ரான்ஸ்பரன்ஸி நிறுவனத்திற்கான இலங்கை தலைமையகத்தின் ஏற்பாட்டில் நடைபெற்று வருகின்றது.இதற்கமைவாக அம்பாறை மாவட்ட நிறுவனங்களின் இணையத்தின் ஒருங்கிணைப்பில் மாவட்டத்தில் உள்ள இந்து, இஸ்லாமிய குருமார்கள் மற்றும் அவர்களுடன் இணைந்து ஆலயங்கள்;,பள்ளிவாசல் நிருவாக உறுப்பினர்கள், சர்வமத ஸ்தாபனத்தில் அங்கம் வகிக்ப்பர்வர்களுக்கான விழிப்புணர்வு செயலமர்வு இன்று இடம்பெற்றது.
அம்பாறை மாவட்ட நிறுவனங்களின் இணையத்தின் தலைவர் வ.பரமசிங்கம் தலைமை பங்குபற்றலுடனும், பயிற்றுவிப்பாளரும் விடயத்துடன் தொடர்புபட்ட மாவட்ட இணைப்பாளருமாகிய ம.லக்ஷ;மிகாந்தின் நெறிப்படுத்தலின் அக்கரைப்பற்றில் அமைந்துள்ள இணைய மண்டபத்தில் நடைபெற்ற தகவல் அறியும் உரிமைச்சட்டம் தொடர்பான விழிப்பூட்டல் பயிற்சியில் இந்து இஸ்லாமிய மத தலைவர்கள் பலர் கலந்து கொண்டனர்.ரான்ஸ்பரன்ஸி இன்ரநெசனல் இலங்கை தலைமையக அதிகாரி பிரியா போல்ராஜ்; சூம் தொழில்நுட்பம் ஊடாக ஊழலுக்கு எதிரான புதிய நடைமுறை விளக்கங்களை வழங்கியிருந்ததுடன்,லக்ஷ;மிகாந்தினால் தகவல் அறியும் உரிமைச்சட்டம் தொடர்பான மேலதிக விளக்கங்களும் வழங்கப்பட்டது.
நிகழ்வில் கலந்து கொண்ட சமய தலைவர்கள் வழங்கப்பட்ட பயிற்சி நெறி தொடர்பில புதிய விடயங்கள் பலவற்றை அறிந்து கொண்டதாகவும் இதனை பொதுமக்கள் மத்தியில் தாம் விழிப்புணர்வூட்டவுள்ளதாகவும் தெரிவித்தனர்.செயற்றிட்டத்தை முன்னெடுத்துள்ள இன்ரநெசனல் ரான்ஸ்பரன்ஸி நிறுவனத்திற்கான இலங்கை தலைமையகத்திற்கும் ஏனையவர்களும் பயிற்சி நெறியினை வழங்கியவர்களும் நன்றி தெரிவித்தனர்.