அருட்தந்தை சந்திரா பெர்னாண்டோ
அடிகளாரின் நினைவு பேருரை நிகழ்வு

0
223

மறைந்த அருட்தந்தை சந்திரா பெர்னாண்டோ அடிகளாரின் குருத்துவ திருப்படுத்தலின் பொன்விழா விசேட திருப்பலியும், அடிகளாரின் நினைவு பேருரையும் இன்று மட்டக்களப்பில் நடைபெற்றது
மட்டக்களப்பு மாவட்ட பல்சமய ஒன்றியத்தின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு மரியாள் பேராலயத்தில் அருட்பணி எ. ஜேசுதாசன் அடிகளாரின் தலைமையில் இடம்பெற்றது.

தொடர்ந்து மட்டக்களப்பு மரியாள் பேராலய வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள அடிகளாரின் சமாதியில் அஞ்சலி நிகழ்வும் அருட்தந்தை சந்திரா பெர்னாண்டோ அடிகளாரின் குருத்துவ பொன்விழா பேருரை நிகழ்வும் மட்டக்களப்பு சாள்ஸ் மண்டபத்தில் நடைபெற்றது . இந்நிகழ்வில் மாவட்ட பல் சமய ஒன்றிய மத தலைவர்கள் ,ஒன்றியத்தின் உறுப்பினர்கள் , அருட்தந்தையர்கள் ,அருட்சகோதரிகள் . அருட்தந்தையின் குடும்ப உறவுகள் என பலர் கலந்துகொண்டனர்
மட்டக்களப்பு மண்ணில் இன மத மொழி கடந்து துன்புறும் மக்களின் மீட்சிக்காய் நீதிக்காய் நல்வாழ்வு சமாதானத்துக்காய் தன்னை அர்பணித்து மறை சாட்சியாக செயற்பட்ட அருட்தந்தை சந்திரா பெர்னாண்டோ அடிகளார் இனத்தெரியாத நபர்களினால் சுட்டுக்கொல்லப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.