‘ஹியூமன் லின்ங்’ மாற்றுத்திறனாளிகளுக்கான வளப்படுத்தல் மத்திய நிலையம் ஏற்பாடு செய்த இல்லங்களுக்கு இடையிலான விளையாட்டு விழா மருதமுனை ஹியூமன் லின்ங் வளாக மைதானத்தில் நிறுவனத்தின் தவிசாளர் எஸ்.எல் அஜமீல் கான் தலைமையில் நடைபெற்றது.கியூமன் லின்ங் நிறுவனத்தின் 15வது ஆண்டு நிறைவை முன்னிட்டு நிறுவனத்தின் பணிப்பாளர் ஏ.எம்.கமறுத்தீன் ஒருங்கிணைப்பில் நடைபெற்ற இந்த இல்ல விளையாட்டு விழாவிற்கு பிரதம அதிதியாக கிழக்கு மாகாண பண்பாட்டலுவலர்கள் திணைக்களப் பணிப்பாளரும் சமூக சேவைகள் திணைக்களத்தின் உதவி பணிப்பாளருமான சரண்யா சுதர்சன் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.
கௌரவ அதிதிகளாக கல்முனை பிரதேச செயலாளர் ஜே.லியாக்கத் அலி, வலயக் கல்லி பனிப்பாளர் எம்.எஸ்.எம்.சஹூதுல் நஜீம் ஆகியோர் கலந்து கொண்டதுடன் விஷேட அதிதிகளாக சமூக சேவைகள் திணைக்களத்தின் அம்பாறை மாவட்ட உத்தியோகத்தர் கே. சிவகுமார், ஸம்ஸ் தேசிய பாடசாலையின் அதிபர் எம்.எம். ஹர்பஹான் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
விளையாட்டு விழாவின் போது றோஸ், லோட்டஸ் ஆகிய இல்லங்களுக்கிடையில் விளையாட்டு விழா நிகழ்வுகளில் நடைபெற்றதுடன் விளையாட்டு விழாவில் றோஸ் அணி சாம்பியன் கிண்ணத்தை சுவிகரித்துக் கொண்டது வெற்றி பெற்று இல்லங்களுக்கான வெற்றி கேடயத்கை அதிதிகள் வழங்கி வைத்ததுடன், போட்டி நிகழ்ச்சிகளில் பங்கு பற்றிய மாணவர்களுக்கு பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டன.
பயிற்சிகளை சிரேஸ்ட்ட உடற்கல்வி ஆசிரியர் ஏ.சி.எம்.அஸ்லம் வழங்கியதுடன் போட்டி நிகழ்வில் ஹியூமன் லிங்க் நிறுவனத்தின் பணிப்பாளர் சபை உறுப்பினர்கள், ஆசிரியர்கள், மாணவர்களின் பெற்றோர்கள், பிரதேச பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.